Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Sunday, 6 August 2017

நெல்லையில் ஆக.9ல் இஎஸ்ஐ குறைதீர்க்கும் முகாம்

நெல்லையில் வருகிற 9ம் தேதி இஎஸ்ஐ குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகமான இஎஸ்ஐ நெல்லை துணை மண்டலம் சார்பில் இஎஸ்ஐ திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு குறைகளை நிவர்த்தி செய்ய மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் முகாம் வருகிற 9ம் தேதி (புதன்) மாலை 4 மணிக்கு நெல்லை இஎஸ்ஐ துணை மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் மருத்துவ கண்காணிப்பு அதிகாரி, துணை மண்டல கூடுதல் ஆணையாளர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். குறைகள் இருப்பின் இஎஸ்ஐ பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம். இத்தகவலை குறைதீர்க்கும் அதிகாரியான உதவி இயக்குநர் சத்தியவாசகம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment