Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Thursday, 7 September 2017

புதிதாக உதயமாகிறது திருப்பத்தூர் மாவட்டம்


வேலுார்: வேலுார் மாவட்டத்தை பிரித்து, புதிதாக திருப்பத்துார் மாவட்டம் உதயமாகிறது.
  நாளை மறுநாள்(செப்.,9) நடக்கும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வேலுார் கோட்டை மைதானத்தில், நாளை மறுநாள் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடக்கிறது. இதற்கான, வாகன பிரசார துவக்க விழா, நேற்று வேலுாரில் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக வணி வரி துறை அமைச்சர் வீரமணி, ''வரும் 9ம் தேதி, வேலுார் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில், முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார்,'' என்றார்.
மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி, வேலுார் மாவட்டத்தை பிரித்து, திருப்பத்துாரை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார். புதிய மாவட்டத்திற்கு, திருப்பத்துார் அல்லது ஏலகிரி மாவட்டம் என, பெயர் வைக்கப்படும்.
புதிய மாவட்டத்தில், திருப்பத்துார், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு தாலுகாக்கள் சேர்க்கப்படும். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment