பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாடி வினா 1
Quiz
- கீரிபாம்பு-இச்சொல்லில் மறைந்துள்ள தொகையைத் தேர்ந்தெடுக்க.
- உம்மைத்தொகை
- வினைத்தொகை
- உவமைத்தொகை
- பண்புத்தொகை
- உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்- பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?- உருவகம், எதுகை
- மோனை,எதுகை
- முரண், இயைபு
- உவமை, எதுகை
- அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.
- வேற்றுமை உருபு
- எழுவாய்
- உவம உருபு
- உரிச்சொல்
- பால காண்டம் ஆற்றுப்படலத்தில் பாயும் நதியாகச் சுட்டப்படுவது.
- வேளியாறு
- பாலாறு
- சரயுநதி
- கோதாவரி
- வெயிலில் அலையாதே,, உடல் ………….
- வெளுக்கும்
- சிவக்கும்
- கருத்து விடும்
- பொன்னிறமாகும்
- தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் செயலைச் செய்வதற்கு வள்ளுவர் காட்டிய உவமை
- மக்களே போல்வர் கயவர்
- சுற்றமாகச் சுற்றும் உலகு
- குன்றேறி யானைப் போர் காண்பது
- கரும்பு கொல்லப் பயன்படும்
- ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’- மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பது முறையே…….
- திருப்பதியும் திருத்தணியும்
- திருத்தணியும் திருப்பதியும்
- திருப்பதியும் திருச்செந்தூரும்
- திருப்பரங்குன்றமும் பழனியும்
‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள் ……………- மேம்பட்ட நிர்வாகத்திறன் பெற்றவர்
- மிகுந்த செல்வம் உடையவர்
- பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்
- நெறியோடு நின்று காவல் காப்பவர்
- இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதின் காரணம் ………………………
- நாட்டைக் கைப்பற்றுதல்
- ஆநிரைக் கவர்தல்
- வலிமையை நிலைநாட்டல்
- கோட்டையை முற்றுகையிடல்
- உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்
பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்று பாராட்டப்படுவோர்- உதியன், சேரலாதன்
- அதியன், பெருஞ்சாத்தன்
- பேகன், கிள்ளிவளவன்
- நெடுஞ்செழியன், திருமுடிக்காரி
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்- இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது
- என் மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
- இகழந்தால் இறந்து விடாது என் மனம்
- என் மனம் இறந்து விடாது இகழ்ந்தால்
- பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடை தருக
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருந்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
இப்பாடல் இடம்பெற்ற நூல்……..- நீதிவெண்பா
- புறநானூறு
- வெற்றி வேற்கை
- கொன்றை வேந்தன்
- அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருந்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
இப்பாடலில் பெருமைப்படுத்தப்படுவது- தமிழ்
- அறிவியல்
- கல்வி
- இலக்கியம்
- அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருந்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
இப்பாடலில் மதி என்ற சொல் குறிப்பது- பண்பு
- பணிவு
- அறிவு
- மகிழ்வு
No comments:
Post a Comment