பத்தாம் வகுப்பு தமிழ் வினாடி வினா 2
Quiz
- மொழிஞாயிறு என்ற பெருமைக்குரியவர்
- பெருஞ்சித்திரனார்
- பாரதியார்
- தமிழழகனார்
- தேவநேயப்பாவணர்
- சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
- அகவற்பா
- வெண்பா
- வஞ்சிப்பா
- கலிப்பா
- பெண்குழந்தையை ‘வாடாசெல்வம்’ என்று கொஞ்சுவது
- பால்வழுவமைதி
- திணைவழுவமைதி
- மரபு வழுவமைதி
- காலவழுவமைதி
உணவு குறித்த பழமொழியைத் தேர்வு செய்க.- காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
- அக்கரைக்கு இக்கரை பச்சை
- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
- அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
- மீளாத்துயர்-எதிர்மறையாக மாற்றுக.
- மீளும் துயர்
- மீள்துயர்
- மீளாதத்துயர்
- மீளுகின்ற துயர்
- பொதுமொழிக்கு எடுத்துக்காட்டு
- கயல்விழி
- வந்து பாடினாள்
- அந்தமான்
- கண்ணன்
- பரிபாடல் …………..நூல்களில் ஒன்று.
- பத்துப்பாட்டு
- பதிணென் மேற்கணக்கு
- எட்டுத்தொகை
- பதிணென்கீழ்க்கணக்கு
- குரலில் இருந்து பேச்சு எனில் விரலில் இருந்து……….
- சோறு
- பூவில்
- கற்றல்
- எழுத்து
- ஆண்பாற் பிள்ளைத் தமிழில் ஒன்று
- கழங்கு
- அம்மானை
- சிறுபறை
- ஊசல்
- தமிழக அரசின் அரசவைக் கவிஞராக சிறப்பிக்கப்பட்டவர்
- ம.பொ.சி
- கண்ணதாசன்
- ஜெயகாந்தன்
- பாரதிதாசன்
- நெடுவேள் குன்றம் என்பது
- பொதிகை மலை
- அழகர் மலை
- சுருளி மலை
- பழனி மலை
- பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்
இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?- பரிபாடல்
- மலைபடுகடாம்
- நற்றிணை
- முல்லைப்பாட்டு
- பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்
விசும்பு என்னும் சொல்லின் பொருள் என்ன?- வானம்
- உலகம்
- கடல்
- காற்று
- பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்
ஊழ்ஊழ்- இலக்கணக் குறிப்பு தருக.- இரட்டைக்கிளவி
- பண்புத்தொகை
- அடுக்குத்தொடர்
- வினைத் தொகை
No comments:
Post a Comment