Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Monday, 14 August 2017

வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணம்


தூத்துக்குடி: தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வழங்கினார். தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜான் அலெக்சாண்டர், துணை அமைப்பாளர் பாலகுருசாமி தலைமை வகித்தனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர் என்.பி. ஜெகன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து 13 கிரிக்கெட் குழுக்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள், 5 வாலிபால் குழுக்களுக்கு வாலிபால் உபகரணங்கள், 5 குழுக்களுக்கு கேரம் போர்டு ஆகியவற்றை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வழங்கினார். விழாவில், மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள்  சங்கர், முத்துதுரை, மாநகர மாணவர் அணி  அமைப்பாளர் சுரேஷ், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார்,  பகுதி இளைஞர் அணி பொன்னுச்சாமி,  அல்பர்ட்,  வார்டு நிர்வாகிகள்  ரங்கராஜ், சண்முகசுந்தரம், பாஸ்கர், வன்னியராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment