Menu

Saturday 12 August 2017

யூ டியூப்புக்கு போட்டியாக ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள ‘வாட்ச்’

யூ டியூப்புக்கு போட்டியாக வாட்ச் என்ற பெயரில் வீடியோ வெளியிடும் சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் முதல் முறையாக இந்த ‘வாட்ச் 'வீடியோ தளத்தை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஃபேஸ்புக்கில் வீடியோக்களைக் கண்டறிவதற்கு ஒரு கணிசமான இடத்தை ஃபேஸ்புக் வழங்கியுள்ளது.
வாட்ச் மூலம் ஃபேஸ்புக் பயனாளர்கள் செய்தி தொலைக்காட்சிகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தவிர, பல வகையான வீடியோக்களையும் பார்க்க மூடியும்.
இதுகுறித்து ஃபேஸ்புக் வெளியிட்ட அறிக்கையில், “நாங்கள் இப்போது முன்பைவிட உங்களுக்கு விருப்பான நிகழ்ச்சிகளை நீங்கள் காணும் வாய்ப்பை எளிதாக்கியுள்ளோம். இதற்காக வாட்ச் என்ற வீடியோ தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இது நிகழ்ச்சிகளுக்கான வீடியோ தளமாகும். வாட்ச்சை உங்கள் தொலைபேசி, டெஸ்க்டாப், லாப்டாப் ஆகியவற்றில் பெறலாம். இதில் நீங்கள் விருப்பமாக பார்க்கும் நிகழ்ச்சிகளை தொடர் எபிசோடுகளாக பார்க்கலாம். நேரடி நிகழ்ச்சிகள், அல்லது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் என அனைத்து விதமான வீடியோக்களையும் காணலாம்.
நீங்கள் தொடர்ந்து பார்க்கும் நிகழ்ச்சிகளை வாட்ச் லிஸ்டில் வைக்கும் வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம் நீங்கள் அந்த நிகழ்ச்சிகளை தவறவிடாமல் இருக்கலாம். தற்போது வாட்ச் அமெரிக்காவில் குறிப்பிட்ட மக்களிடம் சென்றடைந்துள்ளது. மக்களின் வரவேற்பைப் பொறுத்து இன்னும் நிறைய மக்களை வாட்ச் சென்றடைய வாய்ப்புண்டு” என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment