Menu

Wednesday, 9 August 2017

'டியூஷன் பீசு'க்கும் ஜி.எஸ்.டி., : பெற்றோர் அதிர்ச்சி


டியூஷன் பீஸ்களுக்கும், ஜி.எஸ்.டி., வசூல் செய்யப்படுவது, பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வியாளர்கள் கூறியதாவது:

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான டியூஷன் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் வணிக ரீதியிலானவை என கூறி, 18 சதவீத, ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது. இது, பெற்றோரை பெரிதும் பாதிக்கும். ஒரு மாணவர், 10 ஆயிரம் ரூபாய் டியூஷன் பீஸ் கட்டுகிறார் என்றால், அவர் வரியாக, 1,800 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும். தற்போது வேலைவாய்ப்புக்கான போட்டித்தேர்வு என்றாலும், 'நீட்' போன்ற மேற்படிப்புக்கான போட்டித் தேர்வு என்றாலும், பயிற்சி மையங்களைத் தான் தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆகவே, கல்விக்கான இந்த வரி விதிப்பை ரத்து செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நடுத்தர வர்க்கத்தினருக்கு, இது கூடுதல் சுமையாக அமையும். எனவே,டியூஷன் மையங்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில் விலக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment