Menu

Saturday 12 August 2017

பள்ளிகளில் பயிலும்போது நீங்க எந்த ஸ்குவார்டு? ஹவுஸ்?







பள்ளிகளில் பயிலும்போது ஆண்டு விழாவின் போது விளையாடுகிறோமோ இல்லையோ ஆறாம் வகுப்பில் சேரும்போதே ஆளுக்கொரு ஸ்குவார்டில் பிரித்து விடுவார்கள். நான் பயின்ற பள்ளியில் பாரதி, நேரு , காந்தி மற்றும் போஸ் என்று 4 பிரிவுகள் உண்டு. நாம் விளையாடுகிறோமோ இல்லையோ நமது ஸ்குவார்ட் பின் தங்கி விடக்கூடாது என்று விளையாடும் வீரர்களை கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்துவோம். போட்டிகளுக்கு இடையே ஒவ்வொரு ஸ்குவார்டும் எடுத்த பாயிண்டுகளை சொல்லி அந்தந்த ஸ்குவார்டுகளுக்கான கொடிகளை ஏற்றி இறக்குவார்கள். விளையாட்டுப்போட்டிகள் முடிந்து ஒரு சில வாரம் வரை அந்த பேச்சுத் தான் எங்கும்.
இதைப்போல் வேறு பள்ளிகளில் புளூ ஹவூஸ், எல்லோ ஹவுஸ் என்று பிரிப்பார்கள். 
எங்காவது பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடப்பதைப் பார்க்கும்போது இது நினைவில் வந்து போகுமா உங்களுக்கு.
இன்றும் நாம் பயின்ற பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்போது எந்த ஸ்குவார்டு முன்னிலையில் இருக்கிறது என்று பார்க்கத் தோன்றும். எத்தனை வயதானாலும் இவைகள் நம் மனதை விட்டு மறையாது.

No comments:

Post a Comment