Hi Readers

...... Dear SSLC students..அனைவரும் நன்கு தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறப்படைய வாழ்த்துகள்..ALL THE BEST FOR SCIENCE & SOCIAL SCIENCE EXAMS ..

Wednesday, 9 August 2017

நாடு முழுவதும் ‘நீல திமிங்கலம்’ ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும்: கேரளா அரசு

உலக முழுவதும் ‘நீல திமிங்கலம் தற்கொலை’என்ற ஆன்லைன் விளையாட்டின் தாக்கத்தால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். மேலும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளனர். 50 நாட்களுக்கு வெவ்வேறு விபரீத விளையாட்டுகள் இந்த நீல திமிங்கலத்தில் இருக்கும். கடைசி கட்டமாக ஐம்பதாவது நாளில் பங்கேற்பாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும் இறுதி சவால் வழங்கப்படும்.

இந்தியாவிலும் இந்த விபரித விளையாட்டினால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். சமீபத்தில் மும்பையை சேர்ந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டான்.
அதனால் நாடு முழுவதும் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என கேரளா அரசு மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுக்க உள்ளதாக கேரளாவில் இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் நீல திமிங்கலம் விளையாட்டு மூலம் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பெற்றோரிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய எம்.எல்.ஏ. ராஜூ ஆபரகாம்,  “கேரளாவில் இதுவரை 2000 குழந்தைகள் இந்த ஆன்லைன் விளையாட்டை டவுன்லோட் செய்துள்ளனர். பல நாடுகள் விளையாட்டிற்கு தடை விதித்து விட்டன. அதனால் கேரளாவிலும் தடை விதிக்க வேண்டும். மேலும் பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்கள், குழந்தைகளிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என கூறினார்.

No comments:

Post a Comment